தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மே 2ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தக் இக்கட்டான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மே 2ம் தேதி முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, மையங்கள் வெளியே பொதுமக்கள் கூட தடை, வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மே 2ம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலம் கூடாது என்பதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.