தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கிடையாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடைக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2-ம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என அதிரடியாக தெரிவித்தனர்.
மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.