ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை!

tamilnadu
By Nandhini Apr 27, 2021 10:29 AM GMT
Report

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள்  தற்கொலை ,

விருதுநகர் மாவட்டம், முஸ்டகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் (45). இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதன்குமார் முத்துமணி என்ற 2 மகன்களும், ஜெயலலிதா என்ற பெண்ணும் உள்ளனர். முனியம்மாளின் கணவர் முத்துச்சாமி  கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். முனியம்மாளின் தாயார் அடைக்கலம் ,

சம்பவத்தன்று வழக்கம்போல் அக்கம், பக்கத்தினர் முனியம்மாள் கடைக்கு பொருட்களை வாங்க வந்துள்ளனர். ஆனால், கடை திறக்கவில்லை. இதனால் முனியம்மாளின் கதவை தட்டியுள்ளனர். பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது முனியம்மாள், அவரது மகள் ஜெயலலிதா, பாட்டி அடைக்கலம் ஆகியோர் சடலமாக இறந்து கிடந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவியூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முனியம்மாள் வீட்டில் உள்ளே சென்று சோதனை செய்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை! | Tamilnadu

பின்னர், இறந்து கிடந்த 3 பேரையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறந்து போன ஜெயலலிதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.