மே 1ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் மூடல்- தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளையும், கட்டுப்பாட்டையும் அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கையும் தமிழக அரசு அமல்படுத்தியது.
ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் இறைச்சி வாங்க பலர் சனிக்கிழமைகளில் கடைகளுக்கு செல்வதால், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தமிழக அரசு தற்போது தடை விதித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு எதிரொலியால் சனிக்கிழமைகளில் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யலாம் என தமிழக தெரிவித்துள்ளது.
அரசு உத்தரவினைச் செயல்படுத்த இறைச்சிக்கடை வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.