காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை- மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல்

tamilnadu
By Nandhini Apr 24, 2021 11:32 AM GMT
Report

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்றும் அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு நிலைகளில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் பெருநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 81 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 239 ஆக்சிஜன் வசதி கூடிய படுக்கைகளும், 180 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளும் உள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் செல்லும் வாகனங்களுக்கு காவல் பாதுகாப்போடு அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை- மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல் | Tamilnadu

நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க மாவட்டத்தின் பல பகுதிகளில் ஸ்கேன் சென்டர்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இச்சந்திப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.