பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் இசக்கி முத்து உயிரிழந்தார்

tamilnadu
By Nandhini Apr 23, 2021 12:35 PM GMT
Report

பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் ச.இசக்கி முத்து இன்று காலையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயம் மக்களுக்கும் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கும் கல்வி-வேலை வாய்ப்பில் இருபது சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தவர் இசக்கி முத்து.

இது தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தனது கோரிக்கையினை வலியுறுத்தினார். 

இந்நிலையில், இசக்கி முத்துவின் மறைவு, அவரது குடும்பத்தாருக்கும், அச்சமுதாய மக்களுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் இசக்கி முத்து உயிரிழந்தார் | Tamilnadu