ஸ்டெர்லைட் விவகாரம்- ஆதாரம் இல்லாமல் பேசி விட்டேன்! நடிகர் ரஜினிகாந்த்

tamilnadu
By Nandhini Apr 23, 2021 11:24 AM GMT
Report

ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற போது கூட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறியதற்கு எந்த விதமான ஆதாரமும் தம்மிடம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 

இந்நிலையில், இந்த ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று கூறியது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.  இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.  இரண்டு முறை சம்மன் அனுப்பியும் நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகாதது குறித்து, விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரஜினி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது. அத்துடன், இது தொடர்பான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று ரஜினி தரப்பில் கூறப்பட்டது.

ஸ்டெர்லைட் விவகாரம்- ஆதாரம் இல்லாமல் பேசி விட்டேன்! நடிகர் ரஜினிகாந்த் | Tamilnadu

இதனையடுத்து, விசாரணை ஆணையத்தின் 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து தனது கைப்பட கடிதம் எழுதிய கடிதத்தினை வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்திருக்கிறார். அதில், தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு தற்செயலாக நடைபெற்றது என்றும், அப்போது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.