உளவுத்துறை தலைமைக் காவலர் கருணாநிதி கொரோனாவால் பலி

tamilnadu
By Nandhini Apr 23, 2021 08:05 AM GMT
Report

சென்னை கொட்டூர்புரம் உளவுத்துறை தலைமைக் காவலர் கருணாநிதி கொரோனாவால் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொரோனா முதல் அலையை விட 2ம் அலை பயங்கர விளைவை ஏற்படுத்தி வருகிறது. அறிகுறிகள் இல்லாமல் பரவுவதால் மக்கள் கொரோனா பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனையடுத்து, மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணியாமல் செல்வோருக்கு அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் முன்களப் பணியாளர்களும், காவலர்களும், மருத்துவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர்.‘

உளவுத்துறை தலைமைக் காவலர் கருணாநிதி கொரோனாவால் பலி | Tamilnadu

இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் பணியாற்றி வந்த உளவுத்துறை தலைமைக் காவலர் கருணாநிதி கொரோனாவால் உயிரிழந்தார்.

கடந்த 13ம் தேதி வயிற்று வலியால் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா உறுதியானது.

இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை கருணாநிதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.