1 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி- வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் வேதனை

tamilnadu
By Nandhini Apr 22, 2021 10:11 AM GMT
Report

அய்யலூர் தக்காளி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகத்ததால் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை ஆனது. தினமும் 200 டன் தக்காளி தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற அய்யலூர் தக்காளி மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி தினமும் விற்பனைக்கு வரும்.

அய்யலூரில் தினமும் தக்காளி சந்தை நடைபெறும். அய்யலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள 15 கிராமங்களில் இருந்து தக்காளி இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படும்.

1 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி- வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் வேதனை | Tamilnadu

இந்நிலையில், பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள், விஷேங்கள் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் இம்மாதங்களில் காய்கறிகள் விலை அதிகரித்தே காணப்படும். எனவே, இதனை நம்பி விவசாயிகள் தக்காளி விவசாயத்தை பெருமளவில் அனைவரும் சாகுபடி செய்தனர்.

ஆனால், இந்த வருடம் கொரோனா நோய் தொற்று காரணமாக கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, தக்காளி மகசூல் அதிகரித்து, சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.