சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் பழனிசாமி
tamilnadu
By Nandhini
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று குடலிறக்க சிகிச்சைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானதால் நேற்று குடலிறக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து நலமுடன் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 3 நாட்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.