டிராஃபிக் ராமசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி!
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல வழக்குகளில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிப்பெற்றவர் சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி (87). இவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து நடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த டிராஃபிக் ராமசாமிக்கு ஏப்ரல் 4ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிராஃபிக் ராமசாமிக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.