தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் திடீரென அனுமதி!
அறுவை சிகிச்சைக்காக தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் குடலிறக்கம் காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது, முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் தெறிக்கும் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.