இந்த மாவட்டங்களுக்கு மட்டும் பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமாம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் நாளொன்றுக்கு 8000ஐ தாண்டி சென்றுள்ளதால், அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களுக்கு நெறிமுறைகளுடன் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனையடுத்து, இரவு நேர ஊரடங்கால் பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கின் போது பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.