12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எப்படி தெரிந்து கொள்வது?

Tamil nadu
By Karthikraja May 08, 2026 05:58 AM GMT
Report

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எப்படி தெரிந்து கொள்வது? | Tamilnadu 12Th Exam Results Released How To Check

தமிழ்நாடு முழுவதும் சுமார் 8 லட்ச மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

மேலும், 78452 52525 என்ற எண்ணுக்கு Hi அனுப்பி தேர்வு முடிவுகளை பெறும் வசதியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொத்தமாக 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆகும். இதில் மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.17% அதிகரித்துள்ளது. 2639 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எப்படி தெரிந்து கொள்வது? | Tamilnadu 12Th Exam Results Released How To Check

98.87% தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 98.05% தேர்ச்சியுடன் சிவகங்கை இரண்டாமிடமும், 97.63% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

அரசுப் பள்ளிகள் 92.16% தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14% தேர்ச்சியும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.72% தேர்ச்சியும், பெற்றுள்ளன.

மேலும்,.தேர்வெழுதிய 250 சிறைக்கைதிகளில் 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13 முதல் வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் .