ஈரோடு இடைத்தேர்தல் : டெல்லி புறப்பட்ட தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம்

ADMK
By Irumporai Feb 06, 2023 05:10 AM GMT
Report

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

ஈரோடு இடைட்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர்.

ஈரோடு இடைத்தேர்தல் : டெல்லி புறப்பட்ட தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் | Tamilmahan Usain And Cv Shanmugam Delhi

இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.

டெல்லி புறப்பட்டார் தமிழ் மகன்

இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிடுவார் என்றும்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுகான ஏ,பி உள்ளிட்ட படிவங்களில் கையெழுத்திட தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் : டெல்லி புறப்பட்ட தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் | Tamilmahan Usain And Cv Shanmugam Delhi

இந்த நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர்.