தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்: சீனாவில் மாணவர்களுக்கு பாடமாக கீழடி - வைரலாகும் புகைப்படம்

keeladi yunnanminzu TamilLanguage
By Irumporai Sep 03, 2021 10:30 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

கீழடி ஆய்வின் மூலம் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து சீனாவில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருவது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7ம் கட்ட அகழாய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரீகத்தின் கல்வி, கலை, நீர் மேலாண்மை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கீழடி 7ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நடந்து வருகிறது. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டையத் தமிழர்களின் நாகரிகம் உலக அளவில் நீருப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்: சீனாவில் மாணவர்களுக்கு பாடமாக கீழடி - வைரலாகும் புகைப்படம் | Tamillanguage China Yunnanminzu Keeladi

இந்த நிலையில் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது. அங்குள்ள யுனன் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடி ஆழ்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிகி ஜாங் பாடம் எடுத்ததை தனது முகநூலில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நம் இணையவாசிகள் சிவகங்கை டு சீனா என்ற கமெண்டுகளுடன் கீழடி குறித்த பெருமைகளை பகிர்ந்து வருகின்றனர்.