தலையில் பொங்கல் பானை சுமந்த தமிழிசை - என்ன காரணம்?
தெலங்கானா ஆளுநர் தமிழிசை தலையில் பொங்கல் பானை சுமந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை, தெலங்கானா ஆளுநராகவும் உள்ளார். நம் ஊரில் ஆடி மாதம் பண்டிகை கொண்டாடுவது போல் போனாலு என்ற கலாச்சாரப் பாரம்பரிய விழா தெலங்கானாவில் கொண்டாடப்படுகிறது.
இதன் நிறைவு விழா ஆடி அமாவாசை தினமான நேற்று நடைபெற்றது. தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர்.
அப்போது தெலங்கானாவின் பாரம்பரிய வழிமுறைகளைச் செய்ய ஆளுநர் தமிழிசை விரும்பினார். உடனடியாக பூஜையில் பங்கேற்ற அவர் பொங்கல் வைத்து, அதைத் தலையில் சுமந்து சென்று அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டார்.