குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் தேவை- தமிழிசை சௌந்தரராஜன்

Vijay Smt Tamilisai Soundararajan
By Yashini Sep 28, 2026 05:21 AM GMT
Report

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் குழந்தை இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் தேவை- தமிழிசை சௌந்தரராஜன் | Tamilisai Speaks About The Thai Maman Gold Ring

ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 107 விநியோக மையங்கள் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், தங்க மோதிரத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு முக்கியம் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் தேவை- தமிழிசை சௌந்தரராஜன் | Tamilisai Speaks About The Thai Maman Gold Ring

அவர் கூறியதாவது..,

தேவைகளை முதலில் கவனியுங்கள் முதலமைச்சரவர்களே. குழந்தைகளுக்கு தேவை பால்.... தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள்... தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை.

சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர்கள் ஆனால் ஆவின் 14.5 லட்சம் லிட்டர்கள் தான் ஆவின் விநியோகிக்கிறது. ஆவின் பால் பூத்துகளுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது..

தங்கம் மோதிரத்தை விட தங்களது தேவை இன்று பால் தான்.. என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.