அப்பா..இசை வந்திருக்கேன்.. தந்தை உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தை காலமானார்.
குமரி அனந்தன் மறைவு
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன்(93) காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகள் உருக்கம்
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வாங்க சென்ற போது தமிழிசை, அப்பாவின் பார்த்து கதறி அழுதார். ”அப்பா.. இசை வந்து இருக்கேன்… இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா என்று அழுதபடியே கூறினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, நான் வேறு இயக்கத்தில் பயணித்தாலும், நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தியவர் எனது தந்தை தமிழக மக்களுக்கு எனது தந்தை செய்ய நினைத்ததை, நாங்கள் செய்து முடிப்போம்.
அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை சமீபத்தில் தான் அவரது பிறந்த நாளையும் கொண்டாடி இருந்தோம். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.