ஆளுநரை திரும்ப பெறக் கூறுவது தேவையற்றது : தமிழிசை விளக்கம்
தமிழக ஆளுநரை திரும்பெறவேண்டும் என கூறுவது தேவையற்றது என புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை செளந்தர்ராஜன்
புதுவையில் நடைபெற்ற அரசு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில் புதுவையில் ரூ 60 கோடி மதிப்பில் கடல் மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார். மேலும் 100 படுக்கைகளுடன் கூடிய போதை மறு வாழ்வு மையம் அனைக்கப்பட உள்ளதாக கூறினார்.
திரும்ப பெற வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர் சில கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என பேசி வருகின்றனர்.
ஆளுநருக்கு எதிராக கருத்து கூற உரிமையுள்ளது, ஆனால் அதற்காக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சரியல்ல , சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என கூறினார்.