கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன்

Kamal Haasan Smt Tamilisai Soundararajan
By Fathima Feb 06, 2026 01:03 PM GMT
Report

சினிமாவில் வசனம் பேசிக்கொண்டிருந்தவர் தற்போது நாடாளுமன்றத்தில் என்னவென்றே தெரியாமல் தவறாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் என கமல்ஹாசன் பேச்சை விமர்சித்துள்ளார் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராயபுரம் பகுதியில் சிறு குறு வியாபாரிகளிடம் கோரிக்கை கேட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கமல்ஹாசனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது: தமிழிசை சௌந்தரராஜன் | Tamilisai Soundararajan Reply To Kamal Speech

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், கமல்ஹாசன் கட்சி தொடங்கியவுடன் நான் ஒன்றை கூறினேன், அவரது பேச்சுக்கு கோனார் உரை தான் தேவைப்படும் என்று.

அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார் என்பது விளங்கவில்லை, எந்த மொழியில் பேசினார் என்பதும் விளங்கவில்லை.

பாஜக-வுக்கு எத்தனை தொகுதிகள்? யார் யார் போட்டி? வானதி சீனிவாசன்

பாஜக-வுக்கு எத்தனை தொகுதிகள்? யார் யார் போட்டி? வானதி சீனிவாசன்


பெரியார் சொல்லியதை தான் நிர்மலா சீதாராமன் சொன்னார், அதற்கு தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை என பதில் சொல்கிறார், அது பெரியாருக்கான பதில் தான்.

திமுக செய்த மன்னிக்க முடியாத தவறு கமல்ஹாசனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது.

சினிமாவில் வசனம் பேசிக்கொண்டிருந்தவர் தற்போது நாடாளுமன்றத்தில் என்னவென்றே தெரியாமல் தவறாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார், அவரது பேச்சால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.