பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் பிரிந்தார்- தமிழிசையின் உருக்கமான பதிவு

Tamilisai Soundararajan Tamilisai Soundararajan mother passed away
By Petchi Avudaiappan Aug 18, 2021 04:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தாயார் மறைந்த தகவலை தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.