யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Smt Tamilisai Soundararajan Viral Video Elephant Puducherry Death
By Nandhini Nov 30, 2022 05:53 AM GMT
Report

யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

யானை லட்சுமி உயிரிழப்பு

இன்று காலை வழக்கம்போல் காமாச்சி அம்மன் கோயில் சாலையில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை, திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த யானை லட்சுமி, மணக்குள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. லட்சுமி யானையை பக்தர்கள் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானை லட்சுமி உயிரிழப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது.

tamilisai-soundararajan-manakula-elephant

தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி

இந்நிலையில், உயிரிழந்த கோயில் யானை லட்சுமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

மணக்குள விநாயகர் தேர் வரும்போது கம்பீரமாக அந்த தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.