ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் கலக்கல் டான்ஸ் வீடியோ - இணையத்தில் வைரல்

bathukammafestival tamilisaisoundararajan
By Petchi Avudaiappan Oct 07, 2021 11:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 பதுகம்மா மலர் திருவிழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படும் காலகட்டத்தில் தெலங்கானாவில், மகாளய அமாவாசை நாளில் தொடங்கி, 9 நாட்கள் பதுகம்மா விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் தெலங்கானா பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள்.

பதுகம்மா என்பதன் பொருள் ‘அம்மனே வருக’ என்பதால் பெண்களின் காவல் தெய்வமான மகா கௌரியை, பதுகம்மா வடிவில் வணங்குகின்றனர். இந்த விழாவானது தெலங்கானாவின் கலாச்சார உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பதுகம்மா என்பது அழகிய மலர்க் குவியலாகும். இது மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு வகையான மலர்களால் கோபுர வடிவில் ஏழு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது.

ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர். பின்னர் அதை பொது இடத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர். கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பெண்கள் இதனை கொண்டாடுவர். இதனிடையே பதுகம்மா மலர் திருவிழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தெலங்கானா ராஜ்பவனில் பதுகம்மா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பாரம்பரியமான பதுகம்மா மலர் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, மற்ற பெண்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கொண்டாடினர்.