கொரோனா முற்றிலுமாக குறையவில்லை - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
கொரோனா முற்றிலுமாக குறையவில்லை என்றும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநவமி முன்னிட்டு தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தார் அப்போது பேசிய அவர் அனைவருக்கும் ராமநவமி வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும், நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும். கொரோனா குறைந்து இருந்தாலும் முழுவதுமாக கொரோனா விளக்கப்படவில்லை ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லையா அவர்கள் எல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக இருப்பதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவர் கே. எஸ்.பாபு, மாவட்ட பொதுச் செயலாளர் கூரம் விஸ்வநாதன், நகர தலைவர் அதிசயம்குமார்,நகர பொதுச்செயலாளர் காஞ்சி ஜீவானந்தம்,
மாநில நெசவாளர் அணி கணேஷ், மாவட்ட இளைஞர் & மேம்பாடு பிரிவு மாவட்ட தலைவர் ஜி.ஏ.ஜானகிராமன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சிலம்பரசன், பட்டாணி மாவட்ட பொதுச்செயலாளர் ருத்திரகுமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் ரமணி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.