தீபம் ஏற்றி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன்..!

Smt Tamilisai Soundararajan Viral Video
By Nandhini Oct 03, 2022 07:15 AM GMT
Report

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன்  ஆயுத பூஜை கொண்டாடியுள்ளார். 

ஆயுத பூஜை

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்கள் ஒன்று நவராத்திரி விழா. இந்த விழா 9 நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவில், முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு நடத்தப்படும். இறுதிநாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜை பண்டிகை, நாளை 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடு, தொழிற்சாலை, அலுவலகம், கடை உள்ளிட்ட அனைத்து இடங்களில், இனிப்புகள் வைத்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இப்பண்டிகையையொட்டி, இனிப்பு கடைகளிலும், பூக்கடைகளிலும் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

tamilisai-soundararajan

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் அலுவலத்தில் உள்ள சாமி படங்களுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

பிறகு அலுவலக ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தற்போது இது குறித்து வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.