இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

Smt Tamilisai Soundararajan
By Nandhini Aug 12, 2022 09:59 AM GMT
Report

அனைவரது இல்லத்திலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய கொடி படத்தை வைக்க அழைப்பு விடுத்த பிரதமர்

நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்க விடுங்கள் என்றும், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகர்கள், நடிகைகள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர்.

tamilisai-soundararajan

தமிழிசை சவுந்ததராஜன் வேண்டுகோள்

இந்நிலையில், அனைவரது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நம் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் வரை அனைவரின் இல்லத்திலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.