குப்பைகளை அகற்றி சாலையை தூய்மை செய்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் - வைரலாகும் வீடியோ

Smt Tamilisai Soundararajan
By Nandhini Jun 23, 2022 05:27 AM GMT
Report

 தமிழிசை சவுந்தரராஜன்

சமீபத்தில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி தரவில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி தர இல்லை. அப்படியே சொகுசு கப்பலை அனுமதித்தாலும் கலாச்சார சீர்கேடு இல்லாமல் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குப்பைகளை அகற்றி சாலையை தூய்மை செய்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் - வைரலாகும் வீடியோ | Tamilisai Soundararajan

சாலைகளை தூய்மை செய்தார்

தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நம் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி "தூய்மை புதுச்சேரி" திட்டத்தின்கீழ் புதுச்சேரியில் உள்ள சாலைகளில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை செய்திருக்கிறார்.

மேலும், 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி மாநிலம் முழுவதும் 75 இடங்களில் சிறப்பு தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது.