சுந்தர் சிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் : ஆளுநர் தமிழிசை கலகல

Sundar C Smt Tamilisai Soundararajan BJP
By Irumporai Dec 07, 2022 02:33 PM GMT
Report

நடிகை குஷ்புக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டத்தை சுந்தர்.சிக்கு வழங்கலாம் என பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, விஜிபி குழும தலைவர் சந்தோஷம், லைக்கா மருத்துவ குழும தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

டாக்டர் பட்டம்

மேலும் இதில் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை குஷ்பு, இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுஞர் தமிழிசை, “நடிகை குஷ்புக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டத்தை சுந்தர்.சி க்கு வழங்கலாம். மேலும், வெளியுலகில் பிரபலமாக இருக்க கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வழங்கலாம்” என தெரிவித்தார்.