புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்

party congress Pondicherry
By Jon Mar 01, 2021 05:49 PM GMT
Report

தமிழகத்தோடு புதுச்சேரிக்கும் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற உடனே நாராயணசாமி அரசு பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தர்ராஜன் உத்தரவிட்டிருந்தார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரியில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது வேறு யாருமே ஆட்சி அமைக்க உரிமை கோராததால் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்துள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.