பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தராஜன் வேண்டுகோள்
கொரோனாவிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தொடர்ந்து 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மருத்துவமனைகளில் நாள்தோறும் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது .
பெரும்பாலும் கொரோனா நோய் தொற்று 29 முதல் 40 வயதுடையவர்களை தொற்று தாக்குவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும், இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
மக்கள் நலன் வேண்டி முதல்வருடன் இனக்கமாக செயல்பாடுகள் இருக்கும் எனவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.