மக்கள் கோரிக்கை.. பேருந்தில் பயணம் செய்து நேரில் ஆய்வு நடத்திய ஆளுநர் தமிழசை

people bus tamilisai
By Jon Mar 09, 2021 02:04 PM GMT
Report

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து தமிழிசை சவுந்தர ராஜன் குறைகளை கேட்டு வருகிறார். அரசின் திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது அவர் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளோடு தமிழிசை பயணம் மேற்கொண்டார்.

அப்போது பயணிகளிடம், புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகள் எவ்வாறு இருக்கின்றன என்றும், பழுதாக உள்ளதா என்றும், சரியான நிலையில் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து தமிழிசை சவுந்தர ராஜன் குறைகளை கேட்டு வருகிறார். அரசின் திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது அவர் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளோடு தமிழிசை பயணம் மேற்கொண்டார்.

அப்போது பயணிகளிடம், புதுச்சேரியில் உள்ள முக்கிய சாலைகள் எவ்வாறு இருக்கின்றன என்றும், பழுதாக உள்ளதா என்றும், சரியான நிலையில் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில், “பாகூர் சாலை, தவளகுப்பம் போன்ற பகுதிகளில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது வாகன நெரிசல் அதிகம் ஏற்படுகிறது என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று நேரடியாக பார்வையிடுவதற்காக பேருந்தில் மக்களுடன் பயணம் செய்தேன். மக்களின் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பை பெற்றேன்” என்றுள்ளார்.