ஆளுநரை நீக்க கடிதம் மட்டும் எழுதிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் - ஆளுநர் தமிழிசை
ஆளுநரை நீக்க கடிதம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என தமிழிசை விமர்சித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
வீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்தார். அதன்பின், செய்தியாளர்களாச் சந்தித்து பேசிய அவர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
அவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும் தையரிமாக எதிர் கொண்டவர். இன்றைக்கு விசாரணை என்று அணுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை போல் அழகு முத்துக்கோன் இல்லை.
நியாயம் இல்லை
இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உதவி தொகை விடுப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும்.
இங்குள்ள நிலைமையை எடுத்து சொல்ல கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதே போல 50 வருடங்களுக்கு முன்பாக கலைஞர் கருணாநிதி கவர்னர் வேண்டாம் என கடிதம் எழுதினார். அரை நூற்றாண்டாக திமுகவினர் கடிதம் மட்டும்தான் எழுதுகின்றனர். கவர்னருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் கருத்து சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.