சுறாவாக நீந்தி வாரிசு அரசியலை எதிர்த்து.. - விஜய்க்கு தமிழிசையின் பிறந்தநாள் வாழ்த்து

Vijay Smt Tamilisai Soundararajan Birthday Tamil Actors Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jun 22, 2025 06:01 AM GMT
Report

விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து செய்தி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

விஜய் 51வது பிறந்தநாள்

நடிகரும், தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

tvk vijay

விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   

சுறாவாக நீந்தி வாரிசு அரசியலை எதிர்த்து.. - விஜய்க்கு தமிழிசையின் பிறந்தநாள் வாழ்த்து | Tamilisai Birthday Wishes For Tvk Vijay Viral

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த வாழ்த்து செய்தி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழிசை வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய‌ தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து, 

"துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.