NDA கூட்டணி மதுரை மாநாடு: பெரியார் படம் நீக்கப்பட்டது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன்
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில் முகப்பில் இருந்த பெரியார் படம் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெறவுள்ளது, பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டின் நுழைவாயிலில் இருந்த பெரியார் படம் நீக்கப்பட்ட தாமரை படம் வைக்கப்பட்டது, பாஜக கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என கூறப்பட்டது, எடப்பாடி பழனிசாமியையும் அரசியல் ரீதியாக விமர்சித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், இது அந்த மாநாடு நடத்துபவர்களின் உரிமை மற்றும் விருப்பம்.
அவரவர் கொள்கைக்கு ஏற்பட புகைப்படங்களை வைப்பார்கள், நாங்கள் எந்த கொள்கைளை முன்னெடுத்து செல்கிறோமோ அந்த கொள்கையில் சில மாறுபாடுகள் இருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதே 80 % பேர் முருகனை வழிபடுகின்றனர், அதனால் திமுக மாநாட்டில் முருகர் படத்தை வைத்துக்கொண்டு தான் மாநாட்டை நடத்த வேண்டும் என சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மாடீர்கள் தானே, அந்தந்த மாநாடு நடத்துபவர்கள் பின்பற்றப்படும் கொள்கைக்கு ஏற்ப நடந்து வருகின்றனர் அவ்வளவு தான் என தெரிவித்துள்ளார்.