நடுக்கடலில் நிற்கும் கப்பலில் உயிரிழந்த தமிழக இளைஞர்! உடல் அழுகத்தொடங்கியது

Oman
By Fathima Jun 14, 2026 05:37 AM GMT
Report

ஓமன் நாட்டு கடற்பகுதியில் சிக்கியுள்ள கப்பலில் மாலுமியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நிஷாந்த் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குரூஸ்புரத்தை சேர்ந்தவர் நிஷாந்த்(வயது 35), 15 ஆண்டுகளாக மாலுமியாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக MT Celestial வணிகக்கப்பலில் பணிக்கு சேர்ந்தார், ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக கப்பல் ஓமன் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் உயிரிழந்த தமிழக இளைஞர்! உடல் அழுகத்தொடங்கியது | Tamilian Nishant Dies On Ship

இந்நிலையில் கடந்த 8ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிஷாந்த்-க்கு மருத்துவ உதவி தேவை என அழைக்கப்பட்ட போதும் உதவி கிடைப்பதில் தாமதமானதாக தெரிகிறது.

இதனால் கடந்த 11ம் தேதி சுயநினைவை இழந்த நிஷாந்த், அன்று மாலையே உயிரிழந்தார், இதற்கிடையே உடலை பதப்படுத்தும் வசதிகளும் இல்லாததால் அவரது உடல் அழுகத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது கணவரின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்ககோரி அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடுக்கடலில் நிற்கும் கப்பலில் உயிரிழந்த தமிழக இளைஞர்! உடல் அழுகத்தொடங்கியது | Tamilian Nishant Dies On Ship