ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்

leader political assembly
By Jon Feb 09, 2021 12:11 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.

ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை வழங்குவார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரின் இந்த முடிவு வேதனை அளிக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது, காலதாமதம் இன்று ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.