கூட்டத்தில் ஐ லவ் யூ சொன்ன தொண்டர் : பதிலுக்கு சீமான் செய்த சம்பவம்
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமானுக்கு ஐ லவ்யூ சொன்ன நபருக்கு சீமான் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். நேற்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு தொண்டர் ஒருவர் ஐ லவ் யூ எனக்கூறிய நிலையில் சீமான் சற்று யோசிக்கலுக்காமல் செய்த சம்பவம் தொண்டர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் பிரச்சாரம்
ஈரோடு இடைத்தேர்தல் தற்போது தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் வீதிவீதியாக பிரசாரம் செய்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பிரசாரம் செய்தனர்.
தேமுதிக ஆனந்துக்கு ஆதரவாக விஜயகாந்த் மனைவி பிரேமலாதா, அவரது சகோதரர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய சீமான், போர் ஆகிய இரண்டிற்கும் தான் இங்கு போர் நடக்கிறது. இது ஒரு புரட்சிகர அரசியல் போர். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர். நாம் தற்போது செய்வது ரத்தம் சிந்தாத போர். ஆனால் 2 நாளுக்கு முன்பு கூட ரத்தத்தை சிந்திவிட்டோம்(திமுக-நாம் தமிழர் மோதல்). அதேநேரத்தில் ரத்தத்தை சிந்தவும் செய்துவிட்டோம். துன்பத்தை கொடுத்தனுக்கு துன்பத்தை கொடுத்துவிட வேண்டும். வலியை கொடுத்தவனுக்கு அந்த வலியின் அருமையை உணர்த்திவிட வேண்டும் என்றார்.
ஐ லவ்யூ சொன்ன தொண்டர்
மேலும் பாலியல் தொந்தரவு, கூட்டு வன்புணர்வு, நகை கொள்ளை செய்தால் குற்றம் செய்பவர் உடனடிக்குடன் தண்டிக்கப்படுவார்'' என கொஞ்சம் ஆக்ரோஷமாக பேசினார். இந்த வேளையில் கூட்டத்தில் இருந்த தொண்டர் சீமானை பார்த்து ஐ லவ் யூ என்றார். இதை கேட்ட சீமான் சிரித்தபடியே மீ டூ என்றார். இதை கேட்ட தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்ததோடு, சிரிப்பலை ஏற்பட்டது.
இதுபற்றி சீமான் கூறுகையில் அவர் அன்பை தந்தார் பதிலுக்கு நானும் அன்பை கொடுத்தேன் எனக் கூறிய சீமானின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.