தமிழர்களின் பெருமையை பறைசாற்றிய கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடக்கம்
திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டு முதல் கீழடியில் இதுவரை 6 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதுவரையிலும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக பல விதமாக ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பாக 2500 ஆண்டுகள் பழமையான பிராமி எழுத்துக்கள், மண்பாண்ட பொருட்கள், மனித எலும்புக்கூடுகள், ஆபரணங்கள், உறைகிணறுகள் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.
6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற கீழடி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.