தமிழகத்தில் மூன்று காவல்நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மூன்று காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 72ஆவது குடியரசு தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு, சிறப்பாக செயல்பட்ட துறைகளுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
அந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மூன்று காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் நகர காவல் நிலையம், திருவண்ணாமலை நகர காவல் நிலையம், சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களும் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.