தமிழகத்தில் மூவருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர்
chief minister
tamilnadu
eps
By Jon
தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார் . கால்நடை மருத்துவர் பிரகாஷூக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த பிரகாஷூக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷூக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கோவை அப்துல் ஐபாருக்கு முதல்வர் வழங்கினார்.