புர்காவில் மசூதிக்கு போன தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி : பின்னணி என்ன ?
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் புர்கா அணிந்துகொண்டு மசூதிக்கு சென்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஓமனில் தமிழச்சி
ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய மசூதியான சுல்தான் காபூஸ் மசூதிக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை அணிந்து தமிழச்சி தங்கபாண்டியன் சென்றார்.
ஹிஜாப் உடையுடன் அவர் மசூதிக்கு சென்றதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
At The Sultan Qaboos Grand Mosque, the largest mosque in Oman, located in the capital city Muscat now ? pic.twitter.com/J5FHvaBcXR
— தமிழச்சி (@ThamizhachiTh) January 28, 2023
ஹிஜாப் அணிந்த புகைப்படம்
ஹிஜாப் உடை அணிந்து சிரித்தபடி இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அவரது பதிவை பலர் வரவேற்று தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதியை போன்றே, அபுதாபியில் உள்ள கிரான்ட் மசூதிக்குள் பெண்கள் செல்ல வேண்டுமென்றாலும் புர்கா அணிந்து வர வேண்டும் என்பது நிபந்தனையாகும்.