தமிழில் பதவிபிரமாணம் எடுக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு: தமிழிசை சௌந்தரராஜன் !
பதவியேற்கும் போது தமிழில் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதிவியேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன், இன்று பதவியேற்றார் பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.

துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா , புதுச்சேரி என இரட்டை குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள் என்றார். மேலும், ஆளுநர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும்.
அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் எனவும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து அனைவரையும் ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன்.எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்கான தாக இருக்கும் என கூறினார்.