அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ். அடுத்து அரசியல் பிரவேசமா?
சகாயம் ஐஏஎஸ் ஓய்வு பெற மூண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு வேண்டி விண்ணப்பித்திருந்தார். தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக சகாயம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராணைட் ஊழலை வெளிக் கொண்டு வந்ததில் சகாயம் ஐ.ஏ.எஸ் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சகாயம் மக்கள் மேடை என்கிற ஊழலுக்கு எதிரான அமைப்பையும் நடத்தி வந்தார். ஓய்வுக்குப் பிறகு சகாயம் அரசியலுக்கு வரலாம் எனப் பேசப்பட்டு வந்தது.
ஆனால் அதுபற்றி அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது ஓய்வுக்குப் பிறகு சகாயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.