தமிழர் மேலே அக்கறை இல்லாததை காட்டுகிறது: கமல்ஹாசன் பேட்டி
ஐநாவில் இலங்கை எதிரான தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியாவின் செயல், தமிழர் மேலே எந்த அக்கறையும் இல்லாததை காட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, அதிமுக அறிக்கைதான் சிறப்பான அறிக்கை என்ற கேள்விக்கு, அது அவர்களின் கடமை இதற்கு முன்னால் பார்த்து மக்கள் செய்யும் விமர்சனம் தான் சரியான விமர்சனம்.
நானும் மக்களில் ஒருவனாக நின்று பார்த்துள்ளேன், எனவே நாம் செய்யும் விமர்சனமும் பொதுவான விமர்சனம் தான் என தெரிவித்தார். ஐநா இலங்கை குறித்து விமர்சனம் குறித்த கேள்விக்கு, இந்த தேர்தல் நேரத்தில் இது டெல்லியில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும், இலங்கையில் இருந்தாலும், தமிழர் மேலே எந்த ஒரு அக்கறையும் இல்லாதது தான் காட்டுகிறது, இது அவர்களுக்கு நன்மை பயக்காது என்றார்.
மேலும் திமுக குறித்து கமல்ஹாசன் விமர்சித்ததை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டாது என உதயநிதி ஸ்டாலின் பேசிய கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் பெரிய பொருட்டாக எடுத்துக்க வேண்டாம் எனக் கூறினார்.