பிரபல தமிழ் சீரியல் நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல தமிழ் சீரியல் நடிகர் சஹானா ஸ்ரீதர் உயிரிழந்துள்ளார்.
சஹானா ஸ்ரீதர்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய சஹானா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சஹானா ஸ்ரீதர்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் சன் டீவியில் ஒளிபரப்பான தாமரை சீரியலில் விஜய் டிவியின் செல்லம்மா, வள்ளியின்வேளாண் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியல்களில், வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள இவர், சில மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.
62 வயதாகும் ஸ்ரீதருக்கு திநகரில் உள்ள அவரது வீட்டில் இருக்கும் போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளது. இவரது மறைவு தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.