அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் : பிரதமர் மோடி உறுதி
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் மத்திய அரசின் நிதியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணம்
இந்திய பிடதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அதிபர் ஜொபைடன் மற்றும் அவரது மனைவியை சந்தித்து பேசினார், மேலும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்தும் வணிக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகின.

தமிழ் இருக்கை
இந்த நிலையில், அமெரிகாவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார்.
மேலும், இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி எனக் கூறினார்.