திருவிழாவில் திடீரென எழுந்து ஜாலியாக ஆட்டம் போட்ட சீமான் - வைரலாகும் வீடியோ
சங்கத் தமிழிசை திருவிழாவில், இசைக்கு சீமான் எழுந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சங்கத் தமிழிசை திருவிழா
நாம் தமிழர் கட்சியின் கலை மற்றும் இலக்கிய பண்பாட்டுப் பாசறை நடத்தும் தமிழோசை - சங்கத் தமிழ் இசைத் திருவிழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.
தமிழிசையை மீட்டுருவாக்கம் செய்ய, சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் பல்வேறு நூற்றாண்டுகளில் பல நூறு தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பெற்ற தமிழ்ப் பாடல்களை இசை வடிவாக்கி, அவற்றை எளிமையாக இன்றைய சமூகத்திற்குக் கடத்தும் பணியை ஜேம்ஸ் வசந்தன் "தமிழோசை" மூலம் வழங்கினார்.
சீமான் நடனம்
தமிழிசையை மீட்கும் இந்த தனித்துவமான முன்னெடுப்பில் பலத்தரப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், சீமான் திடீரென எழுப்பப்பட்ட இசைக்கு எழுந்து நடனமாட தொடங்கினார்.
இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகமடையச் செய்தது. மேலும், தற்போது அவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.