மாணவர்களுக்கு மாதம் ரூ1000 எப்போது தொடங்கும்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை
சென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியதாவது, புதுமைப்பெண் திட்டம் கீழ் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். இந்த புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
தமிழ்ப்புதல்வன் திட்டம்
இதே போல் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் இனி மாதம் 1000 ருபாய் வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
என தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.