தமிழ் புதல்வன் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை இது தான்! மிஸ் பண்ணாதீங்க
தமிழக அரசின் அரசுப் பள்ளிகளில் பயிலும் 06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் உயர்கல்வியை முடிக்க மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்காக தமிழக அரசு தமிழ்ப் புதல்வன் திட்டப் பதிவு 2024ஐத் தொடங்கியுள்ளது .
தமிழக அரசு
இதன் மூலம் மாநிலத்தின் 06 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதன் மூலம் மாநில மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பான அனைத்து வகையான செலவுகளையும் சுமக்க முடியும் மற்றும் வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
தொடர்ந்து மாணவர்கள் மேலும் மேலும் படிக்க ஊக்குவிக்கப்படுவார்கள், இது மாநிலத்தின் கல்வி மட்டத்தை மேம்படுத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கியமான ஆவணங்கள்
விண்ணப்பதாரர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று இருக்க வேண்டும்.தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வர வேண்டும். தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மாநில மாணவர்கள் தேவைப்படும் முக்கியமான ஆவணங்கள் பின்வருமாறு.
- ஆதார் அட்டை
- குடியிருப்பு சான்றிதழ்
- முந்தைய வகுப்பின் மதிப்பெண் பட்டியல்
- அரசு பள்ளி சேர்க்கை சான்றிதழ்
- மொபைல் எண்
- வங்கி பாஸ்புக்
- குடும்ப ரேஷன் கார்டு
- பாஸ்போர்ட் புகைப்படம்.
கட்டாயமாக மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். மேலும் தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் மேற்கண்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம்.